இயற்கை பேரிடர் ஏற்படக்கூடும் என 7 நாட்களுக்கு முன்பே கேரளாவுக்கு எச்சரிக்கை: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: கேரளாவில் இயற்கை பேரிடர் ஏற்படலாம் என 7 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றும் அப்போதே அரசு உஷார் ஆக இருந்திருந்தால் உயிரிழப்பை குறைத்திருக்கலாம் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் கேரள மாநிலம் வயநாடு, நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,‘‘கேரளாவில் இயற்கை பேரிடர் நிகழக்கூடும் என கடந்த 23ம் தேதியே மாநில அரசுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்தது.

அங்கு ஏற்பட்ட பலத்த மழையை தொடர்ந்து அதே தினத்தன்று தேசிய பேரிடர் மீட்பு படையும்(என்டிஆர்எப்) அனுப்பி வைக்கப்பட்டது.24ம் தேதி மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடப்பட்டது.முதலில் 9 பட்டாலியன்களும், 2ம் கட்டமாக 3 பட்டாலியன்களும் அனுப்பப்பட்டன. புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை பெற்ற ஒடிஷா, குஜராத் மாநிலங்கள் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதே போன்று ஒன்றிய அரசின் எச்சரிக்கையின்படி கேரளாவும் உஷாராக இருந்திருந்தால் உயிரிழப்பு குறைந்திருக்கும்’’ என்றார்.

Related posts

செப் 09: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சொல்லிட்டாங்க…

தாமரை தலைவரை மாற்றுவதற்கான முனைப்பில் வேகம் காட்டி வரும் மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா