இயற்கை அழகு!

*ஜாதிக்காயை அரைத்தெடுத்து அத்துடன் சிறிது சந்தனத்தைக் கரைத்துக் கலக்கி இரவில் படுக்குமுன் முகத்தில் தடவி வைத்திருந்து, பின் காலையில் முகத்தை கழுவி வந்தால் முகப்பருக்கள் மறைவதுடன் முகமும் பளபளப்பாக தோன்றும்.

*சந்தனத்தோடு வெள்ளரி விதைகளைக் கலந்து அரைத்து முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவவும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முகம் ஜொலிக்கும்.

*வறண்ட சருமம் உள்ளவர்கள் வாழைப்பழத்தை மசித்து அதில் பாலாடை மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசி, கால் மணி நேரம் கழித்துக் கழுவினால் சரும சுருக்கம் நீங்கும்.

*மோரில் முள்ளங்கியை அரைத்து முகத்தில் தேய்த்தால் கரும்புள்ளிகள் மறையும்.

*பாலேட்டில் சில துளிகள் எலுமிச்சைப் பழச்சாற்றைக் கலந்து முகத்தில் நன்றாக தேய்த்துப் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறட்சி நீங்கி முகம் பளபளப்பாகும்.

*குப் பை மேனி இலை, மஞ்சள், வேப்பிலை மூன்றையும் அரைத்து முகத்தில் தடவி வைத்து சிறிது நேரம் ஊறவைத்து பின்பு கழுவினால் முகத்தில் உள்ள முடி உதிர்ந்துவிடும்.

*துளசி இலைகளை கசக்கி அந்த நீரை முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் விட்டு காலையில் எழுந்ததும் கழுவிச் சுத்தம் செய்து வந்தால் முகம் அழகாக காட்சி தரும்.
– இந்திராணி தங்கவேல்

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு