இயற்கை அழகு!

எவ்வளவு பேணிப் பாதுகாத்தாலும் சருமம் பலவித பிரச்னைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காலநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம்.எடுத்துக்காட்டாக தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் அடிக்கடி வெளியே செல்ல வேண்டியிருக்கும், பெண்களின் சருமம் கருக்கத்தான் செய்யும். இது போன்ற நிலையில் வீட்டில் நாம் உணவுப் பொருளாக பயன்படுத்தும் தயிரைக் கொண்டே பெண்கள் தமது சரும எழிலைக் காக்கலாம்.

வெண்ணெய் பழம் தயிர்:
தேவையானவை: தயிர் – ½ கப், வெண்ணெய்ப் பழம் (அவகோடா) – பாதி, கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்.
செய்முறை: இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் இதை முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பூசி வைக்கவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவவும். முகம் ஈரப்பதத்துடன் பிரகாசிக்கும்.

ஓட்ஸ் தயிர்:
தேவையானவை: தயிர் – 1 டீஸ்பூன், ஓட்ஸ் – 1 டீஸ்பூன், தேன் – ½ டீஸ்பூன்
செய்முறை: ஒரு கிண்ணத்தில் மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் இதை முகம், கழுத்துப்பகுதியில் தடவி வைக்கவும். 25 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதனால் இறந்த செல்கள் அகற்றப்பட்டு முகம் பளிச்சிடும்.

தேன் தயிர்:

தேவையானவை: தயிர் – ½ கப், தேன் – 2 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு கிண்ணத்தில் தயிர், மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் இதை முகம், கழுத்துப்பகுதியில் தடவி வைக்கவும். 25 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி அகற்றவும். தேன் இயற்கையான ப்ளீச்சாக வேலை செய்வதால் பளிச் முகமும், புத்துணர்வும் கிடைக்கும்.

மஞ்சள் தயிர்:

தேவையானவை: தயிர் – ½ கப், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.
செய்முறை: மஞ்சள் தூளுடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் அதை முகம் கழுத்துப் பகுதியில் தடவி வைத்து, 30 நிமிடங்களுக்கு பிறகு இளஞ்சூடான நீரில் கழுவினால் நல்லது. வாரம் மூன்று முறை இந்த பேக் போட வெயிலால் உண்டாகும் கருமை நீங்கி முகம் பிரகாசிக்கும்.
– அ.ப. ஜெயபால்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா