4 நாடுகள் ஹாக்கி இந்தியா வெற்றி

டுஸல்ட்ராப்: ஜெர்மனியில் நடக்கும் 4 நாடுகள் இளையோர் ஹாக்கி போட்டியின் ஆண்கள் பிரிவில் ஸ்பெயினுடன் நேற்று மோதிய இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. முதல் நிமிடத்தில் நிகோலஸ், 23வது நிமிடத்தில் கொரோமினாஸ் அடித்த பீல்டு கோல் மூலம் ஸ்பெயின் 2-0 என முன்னிலை பெற்றது. அதன் பிறகு கோல் மழை பொழிந்த இந்தியா 6-2 என வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. அமன்தீப் (25’), ரோகித் (28’,45’), சுதீப் (35’, 58’), பாபி சிங் (53’) கோல் போட்டனர். இந்தியா இன்று தனது 2வது லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இந்திய மகளிரணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று ஜெர்மனியை சந்திக்கிறது.

Related posts

மாதவிடாய் கால தலைவலி… தீர்வு என்ன?

ஆர்ட் & கிராஃப்ட்!

காட்டன் புடவை… பராமரிப்பது எப்படி?