தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் வட இந்தியர்கள் முறைகேடு ஒன்றிய அரசுக்கு தெரியாதா?: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கேள்வி

கும்பகோணம்: தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் வட இந்தியர்கள் செய்து வரும் முறைகேடுகள் ஒன்றிய அரசுக்கு தெரியுமா? தெரியாதா? என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புதிய ரயில்வே சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அறிவாலயத்தின் கட்டுமான பணியை நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டி:

தேசிய அளவில் நடைபெறும் போட்டித்தேர்வுகளில் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் புளூடூத் போன்ற உபகரணங்களை கொண்டு தேர்வு எழுதி வெற்றிபெறுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் தான் தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக இந்தி பேசுபவர்கள் இதுபோல் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். ஒன்றிய அரசுக்கு இது பற்றி தெரியுமா அல்லது தெரியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகள் நிலவி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இதற்கு வாய்ப்பில்லை. தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களிலோ, கல்லூரிகளிலோ, தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் இதுபோல் முறைகேடு இல்லாமல் சரியாக, முறையாக தேர்வுகள் நேர்மையாக நடைபெறுகிறது என்பது எங்களுக்கு பெருமைதான். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்