டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலை. விடுதியில் சென்னை மாணவி தற்கொலை; சடலத்தை பார்த்து பெற்றோர் கதறல்

புதுடெல்லி: சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார், சங்கீதா தம்பதியின் மகள் அமிர்தவர்ஷினி. இவர் டெல்லி துவாரகாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ..எல்.எல்.பி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த அமிர்தவர்ஷினி நேற்று முன்தினம் விடுதி அறையில் உள்ள அலமாரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்த கல்லூரி நிர்வாகம் டெல்லி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து மாணவியின் உடலை கைப்பற்றி தீனதாயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி துவாரகா போலிசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மாணவியின் மரண செய்தி தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தெரிவித்தவுடன், அமிர்தவர்ஷினியின் தந்தை செந்தில்குமார் மற்றும் தாயார் சங்கீதா ஆகியோர் நேற்று டெல்லிக்கு விரைந்து வந்தனர். இந்நிலையில், மரணமடைந்த மாணவியின் உடல் டெல்லி ஹரி நகரில் உள்ள தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், ஒப்படைக்கப்பட்ட தங்களது ஒரே மகள் அமிர்தவர்ஷினியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இதையடுத்து இறந்த பெண்ணின் பெற்றோர்கள் கூறும்போது, ‘‘அமிர்தவர்ஷினி 10வது வகுப்பில் 500க்கு 472 மதிப்பெண்ணும், பன்னிரெண்டாம் வகுப்பில் 447மார்க்கும் எடுத்தவர். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலை கழகத்தில் வாய்ப்பு கிடைத்ததால் இங்கு படிக்க வந்தார். இதையடுத்து எங்களது மகளின் இறுதி சடங்குகளை செய்வதற்காக அவரது உடலை காசிக்கு எடுத்து செல்ல உள்ளோம் என்றனர். மேலும் அமிர்தவர்ஷினியின் தற்கொலைக்கு பல்கலைக்கழகத்தில் எழுந்த பிரச்னைகள் காரணமா? அல்லது படிப்பில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் தற்தொலை செய்த அமிர்தவர்ஷினி, கடந்த ஆண்டு சக மாணவிககு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர் என்று உடன் படிக்கும் மாணவர்கள் தெரிவித்தனர்.

 

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்