தேசிய ராணுவப் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை!

ராஷ்டிரிய இந்திய ராணுவப் பள்ளி (Rashtriya Indian Military College (RIMC)) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் செயல்படும் ஆண்களுக்கான ராணுவப் பயிற்சிப் பள்ளி ஆகும். இந்த பயிற்சிப் பள்ளியில் சேர ஆண்டுதோறும் 2 முறை நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. தற்போது மாணவிகள் சேர்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை 1, 2025ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு
வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் யாராவது ஒருவர் தமிழகத்தில் வசிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2.7.2012க்கு முன்னதாகவும், 1.1.2014ம் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. அதாவது விண்ணப்பதாரர்கள் பதினொன்றரை வயது முதல் பதின்மூன்று வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.ராணுவப் பள்ளியில் அனுமதிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் ராணுவப் பள்ளியில், 2025ம் ஆண்டு ஜூலை பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) சேர்வதற்கான தகுதித்தேர்வு, வருகிற டிசம்பர் 1ம் தேதியன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது.

ராஷ்டிரிய இந்திய ராணுவக் பள்ளியில் சேர தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டுவருகின்றது. இந்த தேர்விற்கான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான வழிகள்: இதற்கான விண்ணப்பப் படிவம், தகவல் கையேடு (Prospectus) மற்றும் முந்தைய வினாத்தாள்களின் நகல்களை ஆன்லைன் (online) மூலம் பெறுவதற்கு www.rimc.gov.in என்ற வலைத்தளத்தில் பொதுப்பிரிவினர் ரூ.600/, அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதிச் சான்றிதழுடன் ரூ.555/- செலுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்ட பணம் செலுத்திய ரசீது (Receipt of payment) மற்றும் தங்கள் முகவரியைத் தெளிவாக குறிப்பிட்டு விரைவு அஞ்சல் மூலமாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, GARHI CANTT, DEHRADUN, UTTARAKHAND-248003. (அல்லது)விண்ணப்பப் படிவத்தை வரைவோலை (Demand Draft) மூலம் பெறுவதற்குத் தெளிவான அஞ்சல் எண் உள்ள தங்கள் விலாசம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றுடன் கூடிய கோரிக்கை மனுவுடன், ” THE COMMANDANT RIMC FUND”, DRAWEE BRANCH, HDFC BANK, BALLUPUR CHOWK, DEHRADUN, (BANK CODE- 1399), UTTARAKHAND கிளையில் மாற்றத்தக்க வகையில், பொதுப்பிரிவினர் ரூ.600/- அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதிச் சான்றிதழுடன் ரூ.555/- தொகைக்கு வரைவோலையாக (Demand Draft) THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, GARHI CANTT, DEHRADUN, UTTARAKHAND-248003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை – 600 003 என்ற முகவரிக்கு, வருகிற செப்டம்பர் 30ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்று சேர வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www. rimc. gov. in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகள், நேர்முகத் தேர்விற்கான தேதி மற்றும் இடம், தேர்வு எழுதும் மாநிலத்தின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்குப்பின் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் ராணுவ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மருத்துவப் பரிசோதனை சேர்க்கையின் ஓர் அங்கமே தவிர சேர்க்கையின் இறுதி அல்ல.மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்யும் முறை: 01.12.2024 (ஞாயிற்று கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை கணிதத் தேர்வும், பிற்பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை பொது அறிவுத் தேர்வு மற்றும் பிற்பகல் 2:30 மணி முதல் 4:30 மணி வரை ஆங்கிலத் தேர்வும் நடைபெறும், (மேற்கண்ட கணிதம் மற்றும் பொது அறிவுத் தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம்)

 

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு