தேசிய தொழிலாளர் மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூர்: தேசிய தொழிலாளர் மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் தேசிய தொழிலாளர் மையம் சார்பில் அமைப்புச்சாரா தொழிற்சங்க தலைவர்களுக்கான ஒரு நாள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்றுமுன்தினம் நடந்தது.

கூட்டத்தில், 6 மாதத்திற்கு மிகாமல் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் இஎஸ்ஐ, பிஎப், ஆகியவற்றில் உறுப்பினர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும், கட்டுமானம் மற்றும் மின்வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளிகள் வெளிநாடுகளில் இறக்கும் போதும் விபத்து இறப்பு நிதி உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மாத ஓய்வூதியத்தினை ₹1200 லிருந்து ₹2500 வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில், தேசிய பொது செயலாளர் என்.பி.சாமி தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் மோகன், ஜெயமணி, வடிவேலு, நிர்மலா, கருணாநிதி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பெருமாள் வரவேற்றார். தேசிய நிர்வாகிகள் சூசைராஜ், மோகனசுந்தரம் ஆகியோர் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினர். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

கருந்தரங்கில் தொழிலாளர் உதவி ஆணையர்கள் திருவள்ளூர் என்.கே.தனபால், பொன்னேரி எ.செல்வராஜ், வழக்கறிஞர் தென்பாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கருத்தரங்கில் அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக விக்டர் ஞானமணி நன்றி கூறினார்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு