தேசிய பேரிடர் மீட்பு படைக்கு 40 சதவீத ரிஸ்க் அலவன்ஸ்: அமித் ஷா அறிவிப்பு


புதுடெல்லி: தேசிய பேரிடர் மீட்பு படைக்கு 40 சதவீத ரிஸ்க் அலவன்ஸ் கொடுப்பதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 35 பேர் கொண்ட குழுவினர் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள 21,625 அடி உயரமுள்ள மணிராங் மலையில் ஏறினார்கள். இவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா,’ ஒன்றிய அரசானது தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு 40 சதவீத ரிஸ்க் அலவன்ஸ் வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இது நீண்ட நாள் கோரிக்கையாகும்.

என்டிஆர்எப்பில் உள்ள 16000 வீரர்களும் இதன் மூலமாக பயன்பெறுவார்கள்’ என்றார். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) மற்றும் சிறப்பு பாதுகாப்பு குழுவுக்கு(எஸ்பிஜி) 25சதவீத அலவன்ஸ் பெறுகின்றன” என்றனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்