போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு புதிய இயக்குநர்

புதுடெல்லி: போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (என்.சி.பி) புதிய தலைமை இயக்குநராக 1993ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். அனுராக் கார்க் தற்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எப்) தலைமையகத்தில் கூடுதல் இயக்குநராக உள்ளார்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘இமாச்சலப் பிரதேச கேடரைச் சேர்ந்த 1993 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் கார்க் புதிய என்சிபி இயக்குநராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர் பதவிக்கு பொறுப்பேற்ற நாளிலிருந்து 23.05.2026 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் பொறுப்பில் இருப்பார்’ என்று குறிப்பிட்டுள்ளது.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு