போதை பொருட்கள் வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார் காவல் ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் போதை பொருட்கள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட் போதை பொருடகளை நீதிமன்ற உத்தரவுபெற்று அழிப்பதற்கும், மத்திய குற்றப்பிரிவில் குற்றவாளிகளை கைது செய்தும், நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடித்தும் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என 96 காவல் அலுவலர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (29.06.2023) காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகரில் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை அழிப்பதற்கு நீதிமன்ற ஆணைகளை பெற்று போதை பொருட்களை அழிப்பதற்கு சிறப்பாக பணிபுரிந்த, வடக்கு மண்டல இணை ஆணையாளர் R.V.ரம்யபாரதி தலைமையிலான காவல் குழுவினர்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்த 10 காவல் அலுவலகர்கள் மற்றும் நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடித்தும், குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்க செய்தும், சிறப்பாக பணிபுரிந்த 86 மத்திய குற்றப்பிரிவு காவல் அலுவலர்கள் என மொத்தம் 96 காவல் அலுவலர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் போதை பொருட்கள் வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் ஒழிப்பு

சென்னை பெருநகர காவல், போதை பொருட்கள் (NDPS) தொடர்பான வழக்குகளின் நோடல் அதிகாரி R.V.ரம்யபாரதி, இணை ஆணையாளர் (வடக்கு மண்டலம்) தலைமையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் G.நாகஜோதி, தடய அறிவியல் துறை துணை இயக்குநர் A.விசாலாட்சி, உயர்நீதிமன்ற காவல் உதவி ஆணையாளர் V.ராஜபாண்டியன், போதை பொருட்கள் மூத்த ஆய்வாளர் (மண்டலம்-1) மற்றும் காவல் ஆளிநர்கள் என 10 காவல் அலுவலர்கள் கொண்ட குழுவினர் போதை பொருள் வழக்குகளுக்கான (NDPS) சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள 41 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 996.15 கிலோ போதைப்பொருட்கள், விசாரணை முடிந்து மேல்முறையீட்டு காலம் முடிந்த 84 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 218.825 கிலோ போதைப்பொருட்கள் என மொத்தம் 125 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1213 கிலோ 685 கிராம் கஞ்சா, 1.25 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 40 கிராம் ஹெராயின் என மொத்தம் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 1,215 கிலோ போதைப்பொருட்கள் 26.06.2023 அன்று காலை, செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள G.J மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் ஆபத்தான இரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், 1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறையினரால் கடந்த ஒரு வருடத்தில் 3 முறை ரூ.4.5 கோடி மதிப்புள்ள மொத்தம் 3,135 கிலோ போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகளவில் போதைப்பொருட்களை அழித்ததில் சென்னை பெருநகர காவல் துறை முன்னோடியாக உள்ளது.

மத்திய குற்றப்பிரிவு மல்கானா ஆவண காப்பகம்

மத்திய குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் திரு.அகஸ்டின் பால் சுதாகர் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு. புஷ்பராஜ், உதவி ஆய்வாளர் பிரேம்குமார், மற்றும் முதல்நிலை காவலர் ராம்குமார் (மு.நி.கா.31036) என 4 காவல் அலுவலர்கள், நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவில் உள்ள வழக்குகளின் அறிக்கைகளை தயார் செய்தும், மல்கானா ஆவணங்கள் காப்பக கோப்புகளை சிறப்பாக பராமரித்தும் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு (Job Racket Investigation Wing)

மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு (Job Racket Investigation Wing-JRIW) உதவி ஆணையாளர் S.சுரேந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் J.ரெஜினா, T.சிவசுப்ரமணியன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என 9 காவல் அலுவலர்கள் ஆளிநர்கள் வேலை வாய்ப்பு மோசடி வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

நம்பிக்கை ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு (Entrusted Document Fraud Inv.Wing)

மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு -1(EDF-1), காவல் ஆய்வாளர் மேனகா தலைமையில், 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் முதல்நிலைக் காவலர் என 5 காவல் அலுவலர்களும், நம்பிக்கை ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு -2 (EDF-2) காவல் ஆய்வாளர் V.ரேவதி தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் என 5 காவல் அலுவலர்களும், நம்பிக்கை ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு -3 (EDF-3) காவல் ஆய்வாளர்கள் V.பாரதி மற்றும் M.ஜெயவனிதா தலைமையில் 5 காவல் அலுவலர்களும் என மொத்தம் 15 காவல் அலுவலர்கள் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

மோசடி புலனாய்வு பிரிவு (Forgery Investigation Wing)

மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவு (Forgery) காவல் ஆய்வாளர்கள் திருமதி.K.சித்ரா மற்றும் K.பலவேசம், M.ஷிஜாராணி ஆகியோர் தலைமையில், உதவி ஆய்வாளர் ம்ற்றும் காவல் ஆளிநர்கள் என 7 காவல் அலுவலர்கள் மோசடி பிரிவு வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு (ALGSC)

மத்திய குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் S.பிரபா, D.R.பெமிலா ஷிர்லி ஆகியோர் தலைமையில், காவல் ஆளிநர்கள் கொண்ட 15 காவல் அலுவலர்கள், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்தும், நீதிமன்றத்திற்கான அறிக்கைகள் மற்றும் கோப்புகளை தயார் செய்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

சைபர் கிரைம் பிரிவு (Cyber Crime)

மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு, காவல் துணை ஆணையாளர் திருமதி.கீதாஞ்சலி தலைமையில், கூடுதல் துணை ஆணையாளர் திருமதி.ஷாஜிதா, உதவி ஆணையாளர் திரு.மோகன், காவல் ஆய்வாளர்கள் திவ்யகுமாரி, பூபதி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என 24 காவல் அலுவலர்கள் சைபர் கிரைம் பிரிவு வழக்குகளில் திறம்பட பணியாற்றி பல்வேறு வழக்குகளின் குற்றவாளிகளை கைது செய்தும்,இணைய வழி பணபரிவர்த்தனைகளில் ஏமாந்த புகார்தாரர்களின் பணத்தை திரும்ப பெற்றுக் கொடுக்க வழிவகை செய்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

மேலும், சில வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி, குற்றவாளிகளை கைது செய்யவும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அறிக்கைகள் தயார் செய்யவும் உதவியாக, மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர்கள் திரு.I.ராஜபால் (ALGSC), திருமதி.M.சரஸ்வரி (Fake Passport, Chit & Kandhuvaddi), P.ராஜசேகரன் (EDF-2), 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என 12 காவல் அலுவலர்கள் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

மேற்படி வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த 1 காவல் இணை ஆணையாளர், 2 துணை ஆணையாளர்கள், 2 தடய அறிவியல் அதிகாரிகள், 2 கூடுதல் துணை ஆணையாளர்கள், 6 உதவி ஆணையாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், 16 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 52 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 96 காவல் அலுவலர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை