போதைப்பொருள் தொடர்பான வழக்கில் என்.சி.பி அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜரானார்

புதுடெல்லி: மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் டெல்லி காவல் துறைஇணைந்து கடந்த பிப்ரவரி 15ம் தேதி டெல்லியில் கைலாஷ் பார்க் எனும் பகுதியில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 50 கிலோ எடையிலான போதையூட்டும் பல கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த வேதிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஜாபர் சாதிக் என்பவரை கடந்த 9ம் தேதி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக திரைப்பட இயக்குநர் அமீரை விசாரிக்க என்.சி.பி அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சம்மன் அனுப்பி இருந்தனர். இதைத்தொடர்ந்து போதைப்பொருள் விவகாரம் தொடர்பான விவகாரத்தில் டெல்லி ஆர்.கே.புரத்தில் இருக்கும் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குனர் அமீர் நேற்று காலை ஆஜரானார். அவரிடம் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் பல்வேறு கேள்விகள் அதிகாரிகள் முன்வைத்ததாக தெரியவருகிறது.

Related posts

திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது!!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 4ஆக உயர்வு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..!!