பொது இடத்தில் ஆபாசமாக பேசி இளம்பெண்ணை தாக்கிய போதை ஆசாமி கைது

கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (30), நேற்று முன்தினம் தி.நகர் தர்மாபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அப்போது, உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தபோது, எதிர் வீட்டில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐஸ்வர்யாவை பொது இடத்தில் ஆபாசமாக பேசி கடுமையாக தாக்கியுள்ளார். இதில், ஐஸ்வர்யாவுக்கு லேசாக காயம் ஏற்பட்டது. பின்னர், சம்பவம் குறித்து ஐஸ்வர்யா பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது, குடிபோதையில் இருந்த ராமச்சந்திரன் எதிர் வீட்டில் உள்ளவர்களிடம் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவரது வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யாவை தாக்கியது தெரியவந்தது. மேலும், ராமச்சந்திரன் மீது ஏற்கனவே பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் ராமச்சந்திரன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related posts

அண்ணா பல்கலை பதிவாளருக்கு பிடிவாரன்ட்

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீது 18ல் விசாரணை: ஐகோர்ட் உத்தரவு

புதிதாக மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை: விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்தது மின்வாரியம்