நரசிம்மர் கோயில் தெப்ப திருவிழா

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயிலில் பாடலாத்திரிநரசிம்மர் கோயில் தெப்பத்திருவிழா துவக்கம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அனுமந்தபுரம் சாலையில் பாடலாத்திரி நரசிங்கபெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்குள்ள கோயில் திருக்குளத்தில், ஆண்டு தோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம், ஐந்து நாட்கள் தொடர்ந்து விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப உற்சவம் நடத்த உபயதாரர்கள் மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர். கடந்த நான்கு நாட்களாக இரும்பு பேரல்கள் மற்றும் சவுக்கு கட்டைகள் கொண்டு தெப்பம் கட்டும் பணிகள் நடைபெற்றன.

தெப்ப உற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் உற்சவர் பிரகலாதவரதர், முரளி கண்ணன் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி திருக்குளத்தை மூன்று முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைதொடர்ந்து, இரவு 9மணிக்கு மேல மேலவீதிகளில் மங்கள இசை முழங்க வீதியுலா விமரிசையாக நடைபெற்றது. இதில், சிங்கபெருமாள் கோயிலை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை இரண்டாம் நாள் உற்சவம் விமரிசையாக நடைபெற உள்ளது.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது