நஞ்சநாடு பண்ணையில் பிளாக் பெர்ரி பழச்செடி பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் மும்முரம்

ஊட்டி : நஞ்சநாடு தோட்டக்கலைத்துறை பண்ணையில் பிளாக் பெர்ரி பழச்செடிகள் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.பிளாக் பெர்ரி பழங்கள் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. பெர்ரி பழங்கள் மிகவும் சத்தானவை. இதன் சுவை இனிப்பு, புளிப்பு சுவையை கொண்டிருக்கும். இது சுவையாகவே இருக்கும். சத்தானதும் கூட. மேலும் இது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெர்ரிகளில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் உள்ளன. உயர் கார்ப் உணவுகளோடு எடுத்துக்கொள்ளும் போது அல்லது ஸ்மூத்திகளில் சேர்க்கப்படும் போது இது ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது.

பெர்ரிகள் நார்ச்சத்து நிறைந்தவை. முழுமையான உணவை எடுத்துகொண்ட திருப்தியை அளிக்கும். தற்போது இவ்வகை பழங்கள் ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு தோட்டக்கலை துறை பண்ணையில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பழங்கள் ஜாம் மற்றும் பழ ரசங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், இவைகள் பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்த பழச்செடிகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா