நந்தனம் பகுதியில் ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலை

சென்னை: நந்தனம் பகுதியில் ஏடிஎம் மிஷினை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நந்தனம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலக கட்டிடத்தின் தரை தளத்தில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் 2 பேர், இந்த ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது போல் உள்ளே நுழைந்து, திடீரென மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த கட்டிடத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் சிவக்குமார், சத்தம் கேட்டு ஏடிஎம் மையத்திற்கு ஓடி வந்தார். இதை பார்த்த மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சம்பவம் குறித்து செக்யூரிட்டி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், வங்கி அதிகாரிகள் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று, தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது