நாமக்கல்லில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலையை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நாமக்கல்லில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலையை திறந்து வைத்தார். சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலம்பொலி செல்லப்பன் அறிவகத்தையும் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சிலம்பொலி செல்லப்பனுக்கு முதல்வர் புகழாரம்

கலைஞரால் பாராட்டப்பட்டவர் தான் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலையை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது. சிலம்பொலி செல்லப்பன் தமிழ் பற்றாளராக வருவதற்கு திராவிட இயக்கம் காரணமாக அமைந்துள்ளது. பொது மொழியாக இந்தி இருக்கலாமா என்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசியவர் சிலம்பொலி செல்லப்பன். நிர்வாகமே தெரியாமல் நடப்பதுதான் ஆளுநர் ஆட்சி என்பது தற்போது வரை உள்ளது. 1000 நூல்களுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார் சிலம்பொலி செல்லப்பன். 55 ஆண்டு காலமாக 4000 இலக்கிய கூட்டங்களில் பங்கெடுத்து உரையாற்றி இருக்கிறார் சிலம்பொலி செல்லப்பன்.

Related posts

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது!!

மும்பை பங்குச்சந்தையில் 80,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்..!!

பாஜக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது!