நாகூரில் ஆதரவற்ற முதியவரைப் பராமரிக்கும் பகுதி வாசிகள்: மூன்றுவேளை உணவளித்து காப்பாற்றும் பொதுமக்கள்

நாகூர்: நாகை மாவட்டம் நாகூரில் இரண்டரை ஆண்டுகளாக பழைய காரிலேயே வசித்து வரும் 84 வயது முதியவருக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 1940 ஆம் ஆண்டு பிறந்த குப்புசாமி என்ற அவர் குடும்ப வறுமைகாரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து விடப்பட்டவர் என்று கூறப்படுகிறது. சில இடங்களில் வேலை பார்த்த அவர் வயது முதிர்ந்த நிலையில் ஆதரவின்றி சாலை ஓரத்திலும், குப்பை மேட்டிலும் தங்கி இருந்திருக்கிறார். பட்டறை அருகே பஞ்சர் கடை வைத்துள்ள செந்தில் என்பவர் ஒரு பழுதடைந்த காரில் அந்த முதியவரை தங்கவைத்து உதவியுள்ளார்.

கல்வி அறிவு பெற்றதுடன் உழைத்து வாழ்ந்து வந்தவர் முதிய வயதில் ஆதரவின்றி துன்ப படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், கடை வைத்திருப்பவர்களும் முதியவருக்கு உணவு கொடுத்து உதவி வருகின்றனர். பள்ளி செல்லும் சிறுவர்கள் விளையாட்டு தனமாக காலெடுத்து எரிவது ஒரு தொல்லையாக இருப்பதாக கூறிய அவர்கள் குபு சாமியை முதியோர் இல்லத்தில் சேர்த்து மருத்துவ உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு