நாகர்கோவில் மாநகராட்சியில் ₹61 லட்சத்தில் சாலை பணி: மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.61 லட்சத்தில் சாலை பணிகளை மேயர் மகேஷ் இன்று காலை தொடங்கி வைத்தார். 2வது வார்டுக்கு உள்பட்ட அம்பேத்கர் காலனியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 19 வது வார்டுக்கு உள்பட்ட மிக்கேல் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி.

அதேபோல் 31 வது வார்டுக்கு உள்பட்ட மதர் தெரசா 2ம் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதேபோல் 30வது வார்டுக்கு உள்பட்ட திருவள்ளுவர் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, 23 வது வார்டுக்குட்பட்ட நீதிமன்ற சாலை குறுக்கு தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியும் தொடங்கியது. 7வது வார்டுக்குட்பட்ட கிரவுண் தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, 11-வது வார்டுக்குட்பட்ட புளியடி மின்தகன மேடை செல்லும் சாலையில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவையும் இன்று தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், கவுன்சிலர்கள் மோனிகா, சந்தியா, சோபி, விஜிலா ஜஸ்டஸ், மேரி ஜெனட் விஜிலா, ஸ்ரீலிஜா, இளநிலை பொறியாளர் தேவி, தொழில்நுட்ப அலுவலர் அரவிந்த், திமுக மாநகர செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு