மயிலாடுதுறையில் நாளை நாகப்பபடையாட்சியார் நினைவு நாள்: பொன்குமார் மரியாதை

சென்னை: சமூகநீதி சத்திரியர் பேரவை சார்பில், இந்திய விடுதலைப்போராட்டத்திற்கு காந்தியடிகளுக்கு ஊக்கமளித்த மயிலாடுதுறை நாகப்பபடையாட்சியாரின் நினைவு நாள் பேரணி மற்றும் நிகழ்ச்சி நாளை மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. விழாவிற்கு, கொள்கைப்பரப்பு செயலாளர் ஜெகமுருகன் தலைமை தாங்குகிறார். சீர்காழி வழக்கறிஞர் இ.செல்வராஜ், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஆர்.கலியமூர்த்தி, வன்னியர் மேம்பாட்டு இயக்கத்தலைவர் லோகசம்பத், நாகப்பபடையாட்சி இளைஞர் மன்ற நிர்வாகி ஜெ.ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவீரன் குரு வன்னியர் சங்க செயலாளர் இரா.சங்கர் வரவேற்று பேசுகிறார். டிகேடிஎம் மாவட்ட தலைவர் பா.அல்போன்சா, மாநில துணை தலைவர் எஸ்.ஆனந்தஜோதி, அமைப்புசாரா மாவட்ட தலைவர் கே.மஞ்சுளா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றுகின்றனர். கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் நாகப்பபடையாட்சியார் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில், திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், எம்பி ஆர்.சுதா, திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், சமூகநீதி சத்திரியர் பேரவை இணை பொதுச்செயலாளர் எஸ்.எம்.குமார், வன்னியர் பாதுகாப்பு பேரியிக்க தலைவர் புதுச்சேரி எ.செந்தில்கவுண்டர், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன், நகர மன்ற தலைவர் என்.செல்வராஜ், அமைப்பு செயலாளர் ப.மதியழகன், செங்கல்வராயன் அறக் கட்டளை அறங்காவலர் எம்.என்.விஜயசுந்தரம், மகேஸ்வரி கேட்டரிங் சர்வீஸ் லைன் தங்க.அகோரமூர்த்தி, வரவேற்புக்குழு உறுப்பினர்கள் எ.செந்தில், எஸ்.மோகன்தாசன், எம்.ஏ.ராஜாங்கம், டி.சுதர்சன், எம்.ராஜசேகர், கே.ராஜசேகர், எம்.ஆர்.ராகவன், என்.குருசங்கர் ஆகியோர் பேசுகின்றனர். நாளை காலை 10 மணியளவில் மயிலாடுதுறை நகர பூங்காவிலிருந்து பேரணி புறப்பட்டு ஏ.ஜெ.மஹாலை அடையும். பேரணியை மாவீரன் குரு வன்னியர் சங்க தலைவர் வி.ஜெ.கே.மணி தொடங்கி வைக்கிறார். பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்துகின்றனர்.

 

Related posts

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்

மதுபான கொள்கை வழக்கில் விசாரணை தாமதமாவதால் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க மணிஷ் சிசோடியா முறையீடு

67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்ற விவகாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது: உச்சநீதிமன்றம்