நாகப்பட்டினம் மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளுக்கு இணையதள இணைப்பு

 

நாகப்பட்டினம்,ஜூலை29: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளுக்கும் இணையதள இணைப்பு வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 193 கிராம ஊராட்சிகளுக்கு பாரத்நெட் திட்டத்தின் கீழ் இணையதள வசதி வழங்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழையானது தரைவழியாகவும், மின் கம்பங்கள் மூலமாகவும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் உள்ள சேவை மையம் அல்லது அரசு கட்டடங்களில் நிறுவப்பட்டு வருகிறது.

அதன்படி உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ள அரசு கட்டடத்தில் உள்ள அறைகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சித் தலைவர் மூலம் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சுத்தமாக வைத்திருக்காத ஊராட்சிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தும் போது ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி மூலம் பெறப்படும் அரசு நலத்திட்ட சேவைகளை மக்கள் அனைவரும் அவர்கள் வசதிக்கு ஊராட்சியிலேயே முழுமையாக பெற்று கொள்ள முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நிறுவப்படும் உபகரணங்கன் தமிழ்நாடு அரசின் கடமையாகும். இவைகளை சேதப்படுத்தவோ அல்லது திருடுவது குற்றம் ஆகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இணையதள இணைப்பு வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்