நாகை, கும்பகோணம் உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை; தண்ணீரில் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்..!!

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் டிசம்பர் 4ம் தேதி சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யக் கூடும். டிசம்பர் 4ம் தேதி திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. டிசம்பர் 1, 2, 3ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில் கனமழை:

நாகை மாவட்டத்தில் காலை முதல் பெய்த கனமழையால் எட்டுக்குடி முருகன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.

கும்பகோணத்தில் மிதமான மழை:

கும்பகோணம், திருவிடைமருதூர், ஆடுதுறை உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.

அரக்கோணத்தில் மிதமான மழை:

அரக்கோணத்தில் எஸ்.ஆர்.கேட்., தணிகை, போளூர், சுவால்பேட்டை, வின்டர்பேட்டையில் மிதமான மழை பெய்து வருகிறது.

வாழப்பாடியில் கனமழை:

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெரியகிருஷ்ணாபுரம், அருநூற்றுமலை, நெய்யமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு