நாகை மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

நாகை: நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி(56). மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த பிரதீப்(34), பிரகாஷ்(32), பிரவின்(30), திருமுருகன்(26) ஆகிய 4 பேரும் கடந்த 21ம் தேதி அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை கோடியக்கரைக்கு கிழக்கே 10 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 2 அதிவேக விசைப்படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர் 7 பேர் அங்கு வந்து நாகை மீனவர்கள் 4 பேரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் 500 கிலோ வலை, 4 ஜிபிஎஸ் கருவிகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை பறித்து கொண்டு அவர்களை விரட்டியடித்தனர்.

இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதில் 4 மீனவர்களும் காயமடைந்தனர். பின்னர் கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து மீனவ பஞ்சாயத்தாரிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பஞ்சாயத்தார் கொடுத்த புகாரின்பேரில் நாகை கடலோர காவல் குழும போலீசார் செருதூர் வந்து பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

Related posts

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமனம்

மீன் பண்ணை பணியாளர் கொலை: 6 பேர் கைது

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து..!!