நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் கைது..!!

நாகை: நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் கைது செய்யப்பட்டார். நாகை அரசு குழந்தைகள் காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டார். நாகை அடுத்த சாமந்தான் பேட்டையில் அன்னை சத்தியா காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் சுனாமிக்கு பிறகாக தாய் அல்லது தந்தையர் இழந்தவர்கள் காப்பகத்தில் படிக்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த காப்பகத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு நாகையிலிருந்து ரயில் மூலமாக மாணவிகள் மயமானதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து போலீசார் மாணவிகளை தேடி சென்னையிலிருந்து அவர்களை அழைத்து வந்து மனநல ஆலோசனை கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதி கண்காணிப்பாளர் சசிகலா கொடுத்த புகாரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் வேம்பரசன் நடவடிக்கை மேற்கொண்டார். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து வகுப்பு எடுத்து குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தாக்கல் வெளியாகிய நிலையில் சத்யபிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவை என்ற உத்தரவு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!

நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார கொலை; ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!