எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையில் இருந்து சென்ற 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

நாகை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையில் இருந்து சென்ற 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கைதான 10 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நாகபட்டினம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் 500-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளன. இந்த நிலையில் மீன்கள் குறைவாக கிடைத்ததால் சில படகுகள் திரும்பி வந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படையால் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக நாகப்பட்டினம் அக்கைபேட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு இலங்கை நெடுந்தீவுக்கு அருகே மீன்பிடித்ததாகவும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கப்பல் மீது படகு மோதியதி. இதில் இலங்கை கடற்படை வீரர் ஒருவர் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த படகை கைது செய்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு