நாகை மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி தாக்குதல்: வீடியோ வெளியீடு

நாகை: நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த தர்மன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்றைய முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், தேவராஜ், கார்த்திகேயன், சதிஷ் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் நேற்று மாலை கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அதிகாரிகள் அவர்களின் கப்பலை கொண்டு மீனவர்களின் கப்பலை இடித்து மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் மீனவர்களின் பைபர் படகானது நடுக்கடலில் கவிழ்ந்தது. 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தபோது அவர்களுக்கு எந்த ஒரு முதலுதவியும் செய்யாமல் இலங்கை கடற்படை அதிகாரிகள் அவர்களுடைய கப்பலில் ஏற்றி 6 மணி நேரம் விசாரணை செய்து அவர்களை காப்பாற்றாமல் படகின் அருகாமையிலேயே விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் காலை கரைதிரும்பிய மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் நடுக்கடலில் மீனவர்களின் படகு கவிழ்ந்து தத்தளிக்கக்கூடிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

செருதூர் கிராம மீனவர்கள், கடலில் கப்பல் மீது மீனவர் அமர்ந்திருப்பதும் தொழிலுக்கு சென்ற சக தமிழக மீனவர்கள் அவர்களை காப்பாற்றி அவர்களுடைய படகை மீட்கக்கூடிய காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் ஒரு புறம் தாக்குதல் நடத்தியும், இலங்கை கடற்படை அதிகாரிகளின் அட்டூழியம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சுதந்தரமாக மீன்பிடிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உண்டான அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நாகை மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதால் தொழிலுக்கு செல்லக்கூடிய நாகை மீனவர்கள் அச்சத்துடன் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு 870 படுக்கை வசதியுடன் குடியிருப்புகள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து

மாதவரத்தில் இருந்து உல்லாசத்துக்கு அழைத்து வந்தபோது தகராறு இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர்: துண்டு துண்டாக வெட்டி கொடூரம்; போலீஸ் அதிகாரி வீட்டு முன் வீச்சு; சென்னை துரைப்பாக்கத்தில் பயங்கரம்

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்