நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உத்தரவின்பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் சண்டாளன் என்ற சாதி பெயரை பயன்படுத்துவோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைத்து.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்லில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ‘சண்டாளன்’ எனக் குறிப்பிட்டு அவதூறு பாடல் பாடியதாக சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும் அவர் மீது எஸ்சி,எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உத்தரவின்பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

பெண்களுக்கு மாதம் ரூ.2,000 .. முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,000 : காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி!!

‘’இதுபோன்ற பெண்கள் இருக்கும் வரை மரணம் நடக்கும்’’ கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

23 வயது காதலியை மணந்த 18 வயது கால்பந்து வீரர்