தடை செய்யப்பட்ட அமைப்பிடம் நிதி பெற்ற விவகாரம்?: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்.ஐ.ஏ. விசாரணை!!

சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளிள் ஈடுபட்டதாக இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நபர்களுடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், இசை மதிவாணன், விஷ்ணு, முருகன் உள்ளிட்ட பலரது வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனைகளில் செல்போன்கள், லேப்டாப்கள், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சந்தேகப் பட்டியலில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை விசாரணைக்கு ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் நாம் தமிழர் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஆஜராகினர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன் ஆகியோர் தங்கள் வழக்கறிஞருடன் வந்து விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய இடும்பாவனம் கார்த்திக், விஷ்ணு ஆகியோர் நாளை என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி