மைவி 3 ஆட்ஸ் நிறுவன ஓனரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

கோவை: நெல்லையை சேர்ந்தவர் விஜயராகவன் (48). இவர் மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி யூடியூபில் கவர்ச்சி அறிவிப்பு வெளியிட்டு சுமார் 2 லட்சம் பேரிடம் முதலீடுகளை வாங்கி குவித்தார். இவரது கூட்டாளியான கோவை வெள்ளக்கிணறை சேர்ந்த சக்திஆனந்தன்(43) இந்நிறுவன நிர்வாக இயக்குனராக உள்ளார்.

இந்நிலையில் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் சக்தி ஆனந்தனை சில நாள் முன் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே மைவி3 ஆட்ஸ் நிறுவன உரிமையாளர் விஜயராகவன், அரசியல் கட்சி தொடங்குவதாகவும், முதலீட்டாளர்களை கட்சி உறுப்பினர்களாக மாற்ற உள்ளதாகவும் யூடியூபில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜயராகவன் விதிமீறி முதலீடு குவித்ததாக சிலர் கோவை மாநகர போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் மதுரையில் விஜயராகவனை நேற்று முன் தினம் இரவு கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் விஜயராகவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது