மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள் இடையே மோதலால் பரபரப்பு

மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில் ஜம்போ சவாரியில் கலந்து கொள்ளும் யானைகளை மாநிலத்தின் பல்வேறு முகாம்களில் இருந்து வரவழைத்து அரண்மனை வளாகத்திலேயே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 7.45 மணியளவில் தனஞ்செயா மற்றும் கஞ்சன் யானைகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அந்த யானைகள் அரண்மனையின் ஜெயமார்த்தாண்டா நுழைவு வாயில் அருகே சண்டையிட்டு கொண்டே வெளியே வந்துள்ளது. இதனால், பொது மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த இரண்டு யானைகளும் தொட்டகெரே மைதானத்தின் அருகே பேரிகார்டுகளை தள்ளி கொண்டு சாலைக்கு வந்துள்ளது. உடனே பாகன்கள் மற்றும் வனத்துறையைினர் சம்பவ இடத்திற்கு சென்று அவற்றை அடக்கி உடனே அரண்மனைக்கு அழைத்து வருவதில் வெற்றி கண்டனர். இதனால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை