பொது விநியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பை விநியோகிக்க கோரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உத்தரவு!!

சென்னை :பொது விநியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பை விநியோகிக்க கோரிய விண்ணப்பத்தை
தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,”பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்புடன் சேர்த்து மசூர் பருப்பையும் கொள்முதல் செய்யக் கோரிய அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார். வழக்கு தொடர்ந்துள்ள ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து மசூர் பருப்பு இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்