பழைய வழக்கு தொடர்பாக காவல்நிலையத்துக்கு வந்தபோது மருத்துவமனையில் மயிலாப்பூர் ரவுடி உயிரிழப்பு: சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை

சென்னை:சென்னை மயிலாப்பூர் பல்லாக்கு மா நகரை சேர்ந்தவர் சுகுமார்(36). ‘சி’ கேட்டகிரி ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளது. சுகுமார் தற்போது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். மயிலாப்பூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது டி.பி.சத்திரம், மயிலாப்பூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சென்னை மாநகர காவல்துறையில் பழைய குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை ஒவ்வொரு மாதமும் கண்காணித்து உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பது வழக்கம்.

அதன்படி மயிலாப்பூர் போலீசார் கடந்த 27ம் தேதி ரவுடி சுகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது திடீரென சுகுமாருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவசர அவசரமாக 108 ஆம்புலனஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உள்நோயாளிகாக சிகிச்சை பெற்று வந்த சுகுமாருககு, அதிக ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதைதொடர்ந்து சுகுமார் அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிசிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரவுடி சுகுமார் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். உயிரிழந்த சுகுமாரின் சகோதரர் பாஜவில் மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று மன ரீதியாக துன்புறுத்தியதால் தான் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர்.

உடனே மயிலாப்பூர் போலீசார் போராட்டம் நடத்திய அவரது உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து அவர்கள் கலந்து சென்றனர். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாரிடம் கேட்ட போது, சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால், அவரிடம் பழைய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு தான் நாங்கள் அழைத்தோம். நாங்கள் சுகுமாருக்கு எந்த தொந்தரவு கொடுக்கவில்லை. காவல் நிலையம் வந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நாங்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். மற்றப்படி இதற்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!

பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!