சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள டிரைவர்உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. நூலகர்: 1 இடம். சம்பளம்: ரூ. 18,500-58,600. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் அறிவியல் பாடத்தில் பட்டம்.
2. அலுவலக உதவியாளர்: 1 இடம். சம்பளம்: ரூ. 15,900-50,400. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி.
3. டிரைவர்: 1 இடம். சம்பளம்: ரூ. 18,500-58,600. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமமும், முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓராண்டு டிரைவர் அனுபவம்பெற்றிருக்க வேண்டும்.
4. உதவி மின் பணியாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.18,500-58,600. தகுதி: மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி பெற்று ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து ‘‘H’’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 18 லிருந்து 45க்குள். வயது வரம்பு 1.7.2023 தேதியின்படி கணக்கிடப்படும்.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2024.