மயிலாப்பூரில் ஒரு பகுதியைத் தவிர எந்தப் பகுதியிலும் மின் விநியோக பிரச்சனை இல்லை: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

சென்னை: வடசென்னையின் சில பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது என தலைமைச் செயலாளர் பேட்டி அளித்துள்ளார். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்துள்ளார். மயிலாப்பூரில் ஒரு பகுதியைத் தவிர எந்தப் பகுதியிலும் மின் விநியோக பிரச்சனை இல்லை என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் போஸ்ட் ஆபிஸ் பகுதியில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது, மற்ற பகுதிகளில் மழை நீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஓரிரு இடங்கள் தவிர அனைத்து இடங்களிலும் மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் 0.04 இடங்களில் மட்டுமே மின் விநியோகம் இல்லை என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை மாநகரில் பேருந்து போக்குவரத்து, பால் விநியோகம், மின் விநியோகம் சேதமடைந்துள்ளது. திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

ஒரு சில பள்ளிகளில் தேங்கியுள்ள நீரும் இன்று இரவு அல்லது நாளைக்குள் முற்றிலும் அகற்றப்பட்டுவிடும் என்று தெரிவித்தார். வெள்ளத்தால் சேதமடைந்த வகைகளை பழுது பார்க்க வாகன நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். வாகனங்களை சில நிறுவனங்கள் இலவசமாக பழுதுபார்க்க முன்வந்துள்ளன என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை