மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 3,814 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 3,814 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் முதலீட்டாளர்களுக்கு தந்த ஏராளமான காசோலைகளும் வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் நிறுவன மேலாண்மை இயக்குநர் தேவநாதன், நிறுவனத்தின் இயக்குநர்களான குணசீலன், மகிமை நாதன் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று (செப்.13) மற்றொரு இயக்குநரான சுதீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவின் சார்பில் அறிவுறுத்தியுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவின் சார்பில் மனு மேளா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை மயிலாப்பூர் பைனான்ஸ் கிளப் என்ற இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மனு மேளா நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனைத்து ஆவணங்களையும் கொண்டு புகார் அளிக்கலாம்.

Related posts

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை

ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி