மியாட் மருத்துவமனை தகவல் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலப் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 18ம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சளி மற்றும் இருமல் அதிகமாக இருப்பதால் ஒரு சில தினங்கள் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 23ம் தேதி மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் குறிப்பிட்டு இருந்தது.

தற்போது மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. விஜயகாந்துக்கு நுரையீரல் சுவாசத்தை சீராக்க வென்டிலேட்டர் உதவியுடன் ஆக்ஸிஜன் வழங்க இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட சிகிச்சை குறித்து விஜயகாந்த் குடும்பத்துடன் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது