மை ஸ்டடி லைஃப்!

இதோ இன்னும் ஓரிரு மாதங்களில் எங்கும் பரீட்சை ஃபீவர் துவங்கிவிடும். அதிலும் அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ/மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என பரபரப்புடனும், ஒருவித பயத்துடனும் காணப்படுவர். இந்தத் தேவையற்ற பரபரப்பையும், பயத்தையும் போக்கத்தான் உதவுகிறது மை ஸ்டடி லைஃப் – ஸ்கூல் பிளானர் (My Study Life – School Planner) செயலி. பள்ளி வகுப்புகளுக்கான அட்டவணைகள், தேர்வு கால அட்டவணைகள், மேலும் படிக்க வேண்டிய பாடங்கள், விடப்பட்ட பாடங்கள் என திட்டமிட்டு அதற்கான அட்டவணைகள் அமைத்தல், குறிப்பாக அதற்கான அலெர்ட் கொடுத்து ஞாபகப்படுத்தும் நோட்டிபிகேஷன்கள் என அனைத்துமாக ஒரே செயலியாக இந்தச் செயலி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான செயலியாக விளங்குகிறது. இதன் மூலம் அவர்களுக்கு தேவையான நேரம், காலம் அறிந்து உதவிகள் செய்தல், தேர்வு காலத்தில் நினைவூட்டல்கள் என பெற்றோர்களும் இந்த செயலி உதவியுடன் தங்கள் பிள்ளைகளுக்கு உதவலாம். லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இந்தச் செயலி மூலம் பயனைடைந்து வருகின்றனர்.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு