காதலில் காதலைக் காட்டிலும் இப்போதெல்லாம் கலகங்கள்தான் அதிகமாகத் தென்படுகின்றன. பொதுவாக டிஜிட்டல் உலகம்தான் இந்தக் காதலர்களுக்கு பல நேரங்களில் பிரச்னைகளைக் கொண்டுவருவது. குறிப்பாக குறுஞ்செய்திகளிலேயே பிரச்னையை வளர்த்துக்கொண்டு அதிலேயே சண்டையிட்டு அங்கேயே பிரிந்துவிடும் காதல்கள் தற்போது அதிகரித்து வரும் நிலையில். அதே டிஜிட்டல் உலகில் உங்கள் காதலைக் கொண்டாடவும் ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று ‘மை லவ் – ரிலேஷன்ஷிப் கவுன்டர்‘ (My Love – Relationship Counter) செயலி. அதாவது நீங்களும் உங்கள் துணையும் சந்தித்த நாள் முதல் இந்தச் செயலியில் பதிந்து வைக்க மேலும் புகைப்படங்கள், இருவரும் சந்தித்த தருணங்கள் என சேகரித்து வைத்தால் அவ்வப்போது நோட்டிபிகேஷன்கள் மூலம் அலெர்ட் கொடுத்து சண்டை வந்தாலும் கூட நல்ல தருணங்கள், நினைவுகளை ஞாபகப்படுத்தி இருவரையும் பிரியாமல் வைக்க சின்ன பாலமாக இந்தச் செயலி பயன்படும்.
மை லவ் – ரிலேஷன்ஷிப் கவுன்டர்
previous post