முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு

தூத்துக்குடி: தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில், சின்னக்கண்ணுபுரம் அருகே சென்றபோது, மர்ம நபர் ஒருவர் ரயிலின் பி3 ஏசி பெட்டி மீது கல் வீசி விட்டு தப்பியோடி விட்டார். இதில் பெட்டியின் கண்ணாடி உடைந்ததால் அதில் இருந்த பயணிகள் அலறினர். இதையடுத்து ரயிலை டிரைவர் நிறுத்தினார். ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து கல் வீசப்பட்ட ரயில் பெட்டியை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் 10 நிமிடங்கள் கழித்து ரயில் மீண்டும் புறப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். கடந்த 4ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டதால் 6 பெட்டிகளின் கண்ணாடி சேதமடைந்தது. இதுதொடர்பாக 6 பள்ளி சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்