முத்தியால்பேட்டை ஊராட்சியில் 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் கல்வி உபகரணங்கள்: ஆர்.வீ.ரஞ்சித்குமார் வழங்கினார்

காஞ்சிபுரம்: கர்மவீரர் காமராஜரின் 121ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, முத்தியால்பேட்டை ஊராட்சியில் உள்ள 4 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிமுக (ஓபிஎஸ் அணி)மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் தலைமை வகித்து, கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இவர், கடந்த 23 ஆண்டுகளாக காமராஜரின் பிறந்த நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சொந்த செலவில் கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கி வருகிறார். அந்தவகையில், காமராஜரின் பிறந்த நாளையொட்டி முத்தியால்பேட்டை நடுநிலைப்பள்ளி, ஏரிவாய் அரசு ஆரம்பப்பள்ளி, வள்ளுவப்பாக்கம் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 520 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில், அரிச்சுவடி, வாய்பாடு, கலர் பென்சில், ஜாமின்ட்ரி பாக்ஸ், டிஸ்னரி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்பழகன், வடிவுக்கரசி ஆறுமுகம், தலைமை ஆசிரியர்கள் மணிமாலா, ஏரிவாய் செல்வி, வள்ளுவப்பாக்கம் ஞானேஸ்வரி, களியனூர் மோகன காந்தி மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!