அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திண்டுக்கல்: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதற்கட்டமாக 143 முருகன் கோயில்களில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் தொடங்க தீர்மானம். முருகன் கோயில் அர்ச்சகர்கள், பூசாரி, ஓதுவார், கலைஞர்கள், அடியார்களை சிறப்பிக்க ஆண்டுதோறும் 10 பேருக்கு விருது. அறுபடை வீடுகளில் முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி திருவிழா நடத்த தீர்மானம். அறுபடை வீடு பயண திட்டத்தில் பக்தர்களின் எண்ணிக்கையை 1000ல் இருந்து 1500 ஆக உயர்த்த தீர்மானம். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாக பழனியில் வேல் நிறுவுவது என்று தீர்மானம் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் அமைச்சர் சேகர்பாபுவுக்கு “ஆன்மீகச் செம்மல்” என்ற பட்டத்தை வழங்குவதாக குன்றக்குடி அடிகளார் அறிவித்துள்ளார்.

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.