அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க ஜுன் 30 வரை அவகாசம்.! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஜுன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2024 ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://mu thamizh muruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இம்மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் வரும் 15ம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள், ஆய்வு மாணவர்கள் வரும் 20ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

அதனடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழுவின் முடிவுகளின்படி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஜுன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள் மற்றும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்