முஸ்லிம்கள் சி.ஏ.ஏ. சட்டத்தில் கைது அரசியல் பலனுக்காக மக்களை பிளவுபடுத்துவதா? ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துக்களை பேசி வருகிறார். இதன் தொடர்ச்சியாக மியா முஸ்லிம்கள் என்று அழைக்கப்படும் பூர்வீக வங்காளி முஸ்லிம்கள் மாநிலத்தை கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதை தொடர்ந்து 9 பெண்கள் உள்பட 28 முஸ்லிம்களை குடிமக்கள் அல்லாதவர்கள் என்று அறிவித்து அவர்களை கைது செய்து தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் பிஸ்வாஸ். ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பறிக்கும் இந்த அடாத செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அசாமில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

Related posts

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!

பதிப்பகத்துறையில் தடம் பதிக்கும் சாதனைப் பெண்மணி!