முருகன் வழக்கு விசாரணை நீதிபதி விலகல்

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட முருகன், அடையாள அட்டை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனுவில், லண்டனில் உள்ள மகளுடன் வசிப்பதற்கு விசா எடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குனரிடம் விண்ணப்பித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து, முருகனின் வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts

ராகுல் 3 முறை சென்ற நிலையில் கடவுளின் அவதாரமான மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சாடல்

மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை: ராகுல் காந்தி பேட்டி

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்