முருகனின் வெவ்வேறு ரூபங்கள்

* திருப்பூர் அருகே உள்ள கனககிரியில் முருகன் கையில் கிளி ஏந்தியபடி காட்சித் தருகிறார்.

* கும்பகோணம் அருகில் ‘அழகாபுத்தூர்” என்ற இடத்தில் உள்ள கோயிலில் முருகப்பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.

* மயிலாடுதுறைக்கு அருகில் திருவிடைக்கழி என்ற ஊரில் உள்ள முருகன் கோயிலில் இருக்கும் குமரன் ஒரு கையில் வில்லுடனும், மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.

* நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடன் வடிவ முருகன் சிலையில் இருந்து வியர்வை வருவது வியப்பான ஒன்றாகும்.

* நாகப்பட்டினம் திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப்பெருமான் மூன்று கண்கள் மற்றும் எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறார்.

* சென்னிமலை முருகன் கோயிலில் உள்ள முருகன், இரண்டு முகங்களும் எட்டுக் கரங்களும் கொண்டு காட்சி தருகிறார். சென்னிமலை முருகன் கோயில் சந்நதிக்கு எதிரில் காகங்கள் பறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இலங்கையில் கண்டியில் உள்ள முருகன் சூட்சும வடிவத்தில் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார். இங்கு மூலஸ்தானம் திரை போட்டு மறைக்கப்பட்டிருக்கிறது.

Related posts

ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை

ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?

கிறிஸ்தவம் காட்டும் பாதை