கொலை, கொள்ளையில் தொடர்பு: கடலூரில் முகப்பேர் ரவுடி கைது

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பாடிக்குப்பத்தை சேர்ந்த பிரபல ரவுடி டேனியல்(29). இவர் கடந்த 2019ம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த அழகுமுருகன் என்பவரை வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கு தொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதன்பின்னர் ஜாமீனில் விடுதலையான ரவுடி டேனியல், இவ்வழக்கு தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிவந்தார். இந்த நிலையில், சில மாதங்களாக இந்த கொலை வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து டேனியலை கைது செய்து ஆஜர்படுத்தவேண்டும் என்று பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல்படி, இன்று நள்ளிரவு 1.30 மணி அளவில், திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் தலைமையில் கொண்ட 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது போலீசார் வருவதை அறிந்ததும் ரவுடி டேனியல் தப்பிக்க முயன்றபோது சுற்றி வளைத்து டேனியலை கைது செய்தனர். இதன்பின்னர் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.

காஞ்சிபுரத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவுடி விஷ்வாவின் நெருங்கிய கூட்டாளி என்பதும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் 2 கொலை மற்றும் கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளதும் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்ளதும் 2021ம் ஆண்டில் கதிர்ஆனந்தன் எம்பியின் வெளிநாட்டு காரை தீ வைத்து எரித்த வழக்கு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதும் கடத்தல், வழிப்பறி உட்பட பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து ரவுடி டேனியலை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு