கொலை வழக்கில் இருந்து சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் விடுதலை: பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தால் தண்டனை ரத்து

ஹரியானா: முன்னாள் மேலாளர் கொலை வழக்கில் சாமியாரும் தேரா சாச்சா சவுதா அமைப்பின் தலைவருமான குர்மீத் ராம் ரஹீம் சிங்கை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. குர்மீத் ராம் உத்தரவின் பேரில் 2002ம் ஆண்டு தேரா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் முடிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டு 2021ம் ஆண்டு பஞ்ச் குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

இத்தீர்ப்பினை எதிர்த்து குர்மீத் ராம் ரஹீம் சிங் செய்த மேல்முறையீட்டு மனுவை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் மேலாளர் ரஞ்சித் கொலை வழக்கில் இருந்து குர்மீத் உள்ளிட்ட 5 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் சீடர்களை வன்புணர்வு செய்த வழக்கில் 20 ஆண்டு சிறைத்தண்டனை.

அனுபவித்து வரும் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் தற்போது ரோத்தகில் உள்ள சுநாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு விதிக்கப்பட்ட அனைத்து தண்டனைகளையும் எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் மட்டும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் விடுதலை ஆனாலும் பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளதால் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் சிறையில் இருந்து வெளிவர முடியாது.

Related posts

அன்லிமிடெட் சப்பாத்தி – அன்லிமிடெட் டேஸ்ட்!

உணவும் உலக நாடுகளும்!

பாரீஸ் ஒலிம்பிக்: 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு..!!