மூணாறு அருகே உயிரிழந்த நிலையில் யானை மீட்பு: வனத்துறையினர் விசாரணை

கம்பம்: இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள அடிமாலியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் காட்டுயானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகேயுள்ள அடிமாலியை சேர்ந்தவர் ஷாஜன். இவர் நேற்று வழக்கபோல் தனது தோட்டத்திற்க்கு வேலைக்காக சென்றுள்ளார்.

அப்போது காட்டுயானை ஒன்று தனது தோட்டத்தில் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். ஆனால் காட்டுயானை எவ்வித அசைவும் இன்றி காணப்பட்டது. தொடர்ந்து அவர், யானையின் அருகே சென்று பார்த்தபோது, காட்டுயானை உயிரிழந்தநிலையில் இருப்பதை அறிந்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வனத்துறையினர், காட்டுயானை உயிரிழக்க காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே காட்டுயானை உயிரிழந்த இடம் விவசாயம் சார்ந்த இடமாகும். அடிக்கடி யானைகள் உணவு தேடி இங்கு வந்து செல்வது வழக்கம். ஏதேனும் மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து அதனால் பாதிக்கப்பட்டு யானை உயிரிழந்ததா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்