மூணாறு அருகே பரிதாபம்; செந்நாய்கள் தாக்கி 40 ஆடுகள் உயிரிழப்பு

மூணாறு: மூணாறு அருகே செந்நாய்கள் தாக்கியதில் 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
கேரள மாநிலம், மூணாறு அருகே வட்டவடை ஊராட்சி சிலந்தியாறு பகுதியில் கனகராஜ் என்பவர் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்ட அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் திரும்பி வந்தபோது அவரது 40 ஆடுகள் செந்நாய்கள் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் 10 ஆடுகள் காணாமல் போயின.

கடந்த 2 தினங்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள பழத்தோட்டம் அருகே 4 பசுக்களை செந்நாய்கள் கூட்டம் தாக்கியுள்ளது. பொதுமக்கள் அவற்றிடம் இருந்து பசுக்களை மீட்டுள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் ஆடுகள் செந்நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. மூணாறு மற்றும் சுற்றுப்பகுதிகளில் யானைக் கூட்டம் மற்றும் புலியின் தாக்குதலை தொடர்ந்து, தற்போது செந்நாய்களின் தொந்தரவும் அதிகரித்திருப்பது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு