அனுமந்தராயன்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அலவாச்சிபட்டியில் ரூ.12 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

*பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் அர்ப்பணித்தார்

ரெட்டியார்சத்திரம் : அனுமந்தராயன்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அலவாச்சிபட்டியில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் அர்ப்பணித்தார் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னிமாந்துரை ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு துணை சுகாதார நிலையம், அனுமந்தராயன்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அலவாச்சிபட்டியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவற்ற பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து குட்டத்துப்பட்டி ஊராட்சியில் புதிய நியாயவிலைக்கடைக்கு அடிக்கல் நாட்டியும், டி.புதுப்பட்டி ஊராட்சியில் புதிய நியாயவிலைக்கடைக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம பொதுமக்கள் உயர்தரமான சிகிச்சையினை பெற வேண்டும் என்பதற்காக புதிய துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடம் தரை தளம் 73.80 ச.மீட்டர் பரப்பளவில் சிகிச்சை அறை, லேபர் அறை, படுக்கை அறை, சமையல் அறை, காத்திருப்பு அறை, கழிவறைகள் மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் சிகிச்சைக்காக வெளி இடங்களுக்கு செல்லாமல் உள்ளுரிலே சிகிச்சை பெறுவதற்கான வசதி எற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்குவதற்காகவும், மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்பவும், போதுமான அளவில் குடிநீர் வழங்கிட வேண்டும் என்பதற்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் அரசின் அலுவலகங்களுக்கு சென்று கொடுக்க இயலாதவர்களிடம், இருப்பிடங்களுக்கே வந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பிரித்து வரிசை எண் இடப்பட்டு துறைகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்படும். தகுதியான பயனாளிகளுக்கு உரிய அரசின் திட்டங்கள் வழங்கப்படும். பொது மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இயலாதவர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடுகள் கட்டித்தருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்கள். அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, உறுப்பினர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, திண்டுக்கல் (மேற்கு) வட்டாட்சியர் செழியன், மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி சண்முகம், பேரூர் கழகச் செயலாளர் இளங்கோவன்,வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, முன்னாள் செயலாளர் சண்முகம், ரெட்டியார் சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், மலரவன், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுமதி, காளீஸ்வரி மலைச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் ராமகிருஷ்ணன், பெருமாள்,புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், உதவி செயற்பொறியாளர் காத்தவராயன், உதவி மின் பொறியாளர் ரமேஷ் கண்ணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு